நடிகர் நிகில் சித்தார்த்தா, நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘ஸ்பை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்ற நிலையில்,தெலுங்கில் அடுத்தடுத்தப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.தற்போது நடிகர் மம்முட்டியுடன் இணைந்து படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி கடந்த ஒரு வாரத்திற்கும்
மேலாக நடித்து அசத்தி வருகிறார்.
இதுகுறித்துப் பேசிய அவர், “நான் மம்முட்டியின் தீவிர ரசிகை. அவர் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்று கனவு கண்டு காத்திருந்திருக்கிறேன். தற்போது அந்தக் கனவு ‘பஸூகா’ படத்தின் மூலம் நனவாகி விட்டது இப்படத்தின் இளம் நாயகனுக்கு ஜோடியாக மிக முக்கியமான, கதைக்கு திருப்பம் தரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன், என்றும் அறிமுக இயக்குநர் டீனோ டென்னிஸ் இப்படத்தை இயக்குகிறார்.
மம்முட்டி படப்பிடிப்பில் மிக எளிமையான நடிகராக உள்ளார்.அவருடன் இணைந்து நடிப்பது வாழ்வின் மறக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.