ஜெ. குடும்பத்தில் ஒரு புதிய வாரிசு..!

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் மாதவன் என்பவரை முறைப்படி திருமணம் செய்தார்.

கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி, சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஜெ.தீபா, தனது பிறந்த நாள் அன்று குழந்தை பிறந்தது கடவுளின் வரம் என்று உருக்கமாக பதிவிட்டார். மேலும் 5-ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு, தனக்கு குழந்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.