Connect with us

Raj News Tamil

“யாரும் கவலைப்படாதீங்க” – ரசிகர்களுக்கு உற்சாகம் தந்த ஜாக்கி ஜான்!

சினிமா

“யாரும் கவலைப்படாதீங்க” – ரசிகர்களுக்கு உற்சாகம் தந்த ஜாக்கி ஜான்!

90-ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான ஹாலிவுட் நடிகர்களில் ஒருவர் ஜாக்கி ஜான். எவ்வளவு ஆபத்தான ஸ்டண்ட் காட்சியாக இருந்தாலும், டூப் இல்லாமல் செய்யக் கூடிய இவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது, அவரது வயதான தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்தனர். “நம்ம ஜாக்கி ஜானுக்கு வயசாகிடிச்சா” என்று வருத்தமாக கமெண்ட்ஸ் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஜாக்கி ஜான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தன்னுடைய வயதான தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், வருத்தம் அடைந்ததாக கேள்விப்பட்டேன். ஆனால், அது உண்மையான தோற்றம் கிடையாது. என்னுடைய புதிய திரைப்படத்திற்காக, அப்படியான தோற்றத்தில் நடிக்க உள்ளேன். யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top