சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் என்று சில ஹிட் படங்களில் நடித்தவர் ஜெய். இவர் தற்போது கருப்பர் நகரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ஜெய் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடவுள் ஆசியுடன், புதிய வாழ்க்கை ஆரம்பம் என்று தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, கழுத்தில் தாலியுடன் பிரபல நடிகை பிரக்யா நக்ராவும், நடிகர் ஜெய்யும், அருகருகே, நெருக்கமாக உள்ளனர். மேலும், அவர்களது கையில், பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளது.
இதனை வைத்து பார்க்கும்போது, இருவரும் திருமணம் செய்துக் கொண்டு, ஹனிமூன் செல்ல இருப்பதாக தெரிகிறது.
ரசிகர்களும், அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இது விளம்பரப் படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமாக கூட இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.