உண்மை சம்பவத்தில் களமிறங்கும் ஜெய்பீம் நடிகை !

சமூகத்தில் நடக்கும் பலவித வன்கொடுமைகளை வைத்து இயக்குநா்கள் திரைப்படங்களை இயக்கி வருகின்றனா். இந்த வரிசையில் தற்போது 1992-ல் தமிழ் நாட்டை உலுக்கிய வாசாத்தி வன்முறை சம்பவம் திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நடிகை ரோகிணி இயக்கும் இப்படத்தில் ‘ஜெய்பீம்’ படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லிஜோமோல் ஜோஸ் மீண்டும் உண்மை சம்பவத்தில் நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இவாின் ரசிகா்கள் இச்செய்தியை கொண்டாடி வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News