நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ஜெயிலர் 2. அனிருத் இசையமைத்திருந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
மேலும், 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சாதனையும் படைத்திருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான தகவல் கசிந்துள்ளது.
அதாவது, ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவை, ரஜினியின் பிறந்த நாள் அன்று ரிலீஸ் செய்யலாம் என, படக்குழுவினர் முடிவு செய்திருந்தார்களாம்.
ஆனால், சில காரணங்களால், அந்த முடிவு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது வந்துள்ள தகவலின்படி, இந்த அறிவிப்பு வீடியோவை, ஆங்கில புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.