ஜெயிலர் 2 படத்தின் புதிய அப்டேட்!

ரஜினி நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜெயிலர். அனிருத் இசையமைத்திருந்த இந்த திரைப்படம், கடந்த 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ரஜினியின் ஸ்டைல், மாஸான BGM காரணமாக, மிகப்பெரிய வெற்றியை இப்படம் பதிவு செய்திருந்தது. மேலும், 600 கோடி ரூபாய்க்கு மேல், இப்படம் வசூலித்திருந்தது.

இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் தொடர்பான அறிவிப்பு, சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதையடுத்து, இந்த படத்தின் மீது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஜெயிலர் 2 குறித்து புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாம். இன்றில் இருந்து 15 நாட்களுக்கு, சென்னையில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம். இதில், பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News