சினிமா
ஜெயிலர் இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கு? கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் யார்? யார்?
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஜெயிலர் என்ற படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள், இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில், டப்பிங் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னை நேரு ஸ்டேடியத்தில், ஜூலை மாதம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. மேலும், இந்த விழாவில், ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள், கலந்துக் கொள்ள உள்ளனர். இந்த தகவலை அறிந்த தலைவரின் ரசிகர்கள், கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
You must be logged in to post a comment Login