Connect with us

Raj News Tamil

அதிக வசூலை குவித்த தமிழ் படமாக மாறிய ஜெயிலர் படம்..!!

சினிமா

அதிக வசூலை குவித்த தமிழ் படமாக மாறிய ஜெயிலர் படம்..!!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால், ஜெயிலர் திரைப்படம் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

இப்படம் ஒரே வாரத்தில் ரூ.375 கோடி வசூலித்து உலகளவில் மாஸ் காட்டிய நிலையில், தற்போது அப்படத்தின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.

தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் ரூ.500 கோடி வசூலித்து புது சாதனை ஒன்றை படைத்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. அந்த சாதனையை தற்போது ஜெயிலர் படம் முறியடித்துள்ளது.

இதுவரை 2.0 திரைப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்ததே சாதனையாக இருந்து வருகிறது. ஜெயிலர் படம் வசூல் வேட்டை நடத்தி வருவதால் அதிக வசூல் குவித்த தமிழ் படம் என்கிற சாதனையை விரைவில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top