நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
படத்தின் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 12 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன் படி படம் வெளியான 3 நாட்களில் 140 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தொடர் விடுமுறை வருவதால் படத்தின் வசூல் 300 கோடியை நெருங்கும் என கூறப்படுகிறது.