Connect with us

Raj News Tamil

எல்லா இந்திய படங்களையும் பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்…!!

சினிமா

எல்லா இந்திய படங்களையும் பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்…!!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது ஜெயிலர் படம் OTT யில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் மலேசியாவில் ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்த ஐங்கரன் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

மலேசியாவில் இதற்கு முன் வந்த எல்லா இந்திய படங்களையும் ஜெயிலர் படம் பின்னுக்கு தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளது.

இதற்கு முன் ஷாருக் கானின் தில்வாலே படம் 5.5 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூலித்து முதலிடத்தில் இருந்தது. அதை ஜெயிலர் படம் முறியடித்து இருக்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top