நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களையே பெற்ற இந்த படம், பின்னாளில், பெரும் வெற்றியை பதிவு செய்தது. கிட்டதட்ட 700 கோடி ரூபாய் வரை, வசூலை குவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா, சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஜெயிலர் சுமார் ரக திரைப்படம் என்றும், பின்னணி இசையை சேர்த்த பிறகு தான், சூப்பரான திரைப்படமாக மாறியது என்றும் கூறினார்.
மேலும், இதற்காக அனிருத்துக்கு நன்றிக் சொல்கிறேன் என்றும் அவர் கூறினார். ஜெயிலர் Average திரைப்படம் என்று ரஜினி கூறியிருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.