தமிழ் சினிமாவில் ஜெயிலர் மட்டுமே செய்துள்ள பிரம்மாண்ட சாதனை!

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், நடிகர் ரஜினியை வைத்து, ஜெயிலர் என்ற படத்தை எடுத்திருந்தார்.

தனது முந்தைய படமான பீஸ்ட் தோல்வியை சந்தித்ததால், ஜெயிலரை வெற்றி படமாக மாற்றுவதற்கு, நெல்சன் கடுமையாக உழைத்திருந்தார். அதன் பயனாக, இப்படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படம் செய்துள்ள பிரம்மாண்ட சாதனை குறித்து தெரியவந்துள்ளது. அதாவது, ஜெயிலர் திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில், 400 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இதன்மூலம், ஒரே வாரத்தில் 400 கோடி ரூபாயை வசூலித்த, முதல் தமிழ் திரைப்படமாக ஜெயிலர் மாறியுள்ளது. மேலும், 500 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை நோக்கியும், இப்படம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News