ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சி திரையிடப்படுவதற்கு முன், இயக்குநர் நெல்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்காக, 18 மாதங்கள் கடுமையாக உழைத்துள்ளோம் என்றும், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு மிகப்பெரிய நன்றி என்று நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜெயிலர் திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பு, தன்னுடைய கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை பாருங்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், ஒருவேளை இது நெல்சனின் சினிமாடிக் யுனிவர்ஸ் படமா? என்று ஆர்வத்துடன் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.