நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 10-ஆம் தேதி அன்று வெளியான திரைப்படம் ஜெயிலர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூலில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜெயிலர் திரைப்படம் 375 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், இது தற்காலிகமான வசூல் தான்.. இன்னும் வரும் நாட்களில் மாறிக் கொண்டே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இவ்வளவு தொகை வசூலித்திருப்பதை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.