Connect with us

Raj News Tamil

ஜெயிலர் படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது..?

சினிமா

ஜெயிலர் படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது..?

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கவிருப்பதாக பிரபல திரையரங்கம் ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், ‘இன்று ஜெயிலரின் டிக்கெட் முன்பதிவு ஓபன் செய்யப்பட உள்ளதாகவும் சரியான நேரத்தை விரைவில் அறிவிப்பதாகவும், முத்துவேல் பாண்டியனை சந்திக்க தயாராகுங்கள்,’ என்று பதிவிட்டுள்ளது.

மேலும், ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9:00 மணிக்கு மட்டுமே தொடங்கும் என்றும், முன்பதிவு தொடங்கிய அரைமணி நேரத்திலேயே முதல் 4 நாட்கள் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும் என எதிர்பார்க்கிறோம்’ என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஜெயிலர் படத்திற்கு சிறப்பு காட்சி இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

More in சினிமா

To Top