ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம், வரும் ஆகஸ்டு 10-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் பெங்களுார் செல்ல முடிவு செய்துள்ளனர்.
அதிகப்படியான ரசிகர்கள் அங்கு செல்வதால், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு டிக்கெட்டின் விலை5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறதாம். இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.