”ஜெயிலர்” படத்தில் நேரடியாக களம் காணும் 3 – சூப்பர் ஸ்டார்கள்..?

அண்ணாத்த படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப்குமார் இயக்கிவரும் இதனை, சன் பிக்சர் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதி படுத்தும் விதமாக, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மோகன் லாலின் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது இவர்களது ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News