கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து, ஜெயிலர் என்ற படத்தை இயக்கி வருகிறார். தனது முந்தைய படமான பீஸ்ட் தோல்வியை சந்தித்ததால், ஜெயிலர் படத்தை எப்படியாவது ஹிட்டாக்க வேண்டும் என்று நெல்சன் தீவிரமாக பணியாற்றி வருகிறாராம்.
இதனால், இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகர் வசந்த் ரவி, ஜெயிலர் படம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “இதுவரை ரஜினி நடித்துள்ள 168 படங்களில் பார்க்காத ரஜினியை ஜெயிலர் படத்தில் பார்ப்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜெயிலர் திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் வசந்த் ரவி இவ்வாறு கூறியிருப்பது, படத்தின் ஹைப்பை இன்னும் அதிகரித்துள்ளது.