ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The wait is over…#Jailer update today at 6pm! 🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial
— Sun Pictures (@sunpictures) May 4, 2023