“3 மடங்கு சம்பளம் கேட்டேன்” – ஆச்சரியம் தந்த ஜெயிலர் வில்லன்!

ரஜினி நடித்திருந்த ஜெயிலர் திரைப்படம், கடந்த மாதம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ரஜினிக்கு அடுத்தபடியாக, இந்த படத்தில் நடித்திருந்த விநாயகனின் நடிப்பை தான், பலரும் பாராட்டியிருந்தார்கள்.

இந்நிலையில், இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஜெயிலர் படத்தில், தனக்கு 35 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக சிலர் செய்தி வெளியிடுகிறார்கள்.

ஆனால், அதைவிட 3 மடங்கு அதிகமாக தான் சம்பளம் பெற்றேன் என்று கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்பில் தனக்கு ராஜமரியாதை கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News