நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம், பெரிய வெற்றியை பெற்றது.
இந்த திரைப்படம், இதுவரை 635 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் சாதனையை லியோ திரைப்படம், மிஞ்சுமா என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால், இந்த திரைப்படம், ப்ரி பிசினசிலேயே 400 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதால், அசால்ட்டாக இலக்கை அடைந்து விடும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.