நம்பர் 1 ட்ரெண்டிங்கில் ஜெயிலர் பாடல்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள கன்னட நட்சத்திரங்கள் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் வெளியான ஒரு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.இப்பதிவினை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News