Connect with us

Raj News Tamil

தொடர்ந்து வரும் ஜெயிலர் அப்டேட்!

சினிமா

தொடர்ந்து வரும் ஜெயிலர் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர்.இத்திரைப்படத்தின் காவாலா, ஹூக்கும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, இணையத்தில் பல புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொள்ள டிக்கெட் வெளியிடப்பட்டது. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், வெறும் 15 நொடிகளுக்குள் விற்பனையாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் படத்தின் 3வது சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூஜூபி என்ற அப்பாடல் நாளை மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியாக உள்ளது.

இத்தகவலை ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top