Connect with us

Raj News Tamil

கசிந்தது ஜெயிலரின் ஹெச்.டி. பிரிண்ட் ! குஷியில் இணையதளவாசிகள்!

சினிமா

கசிந்தது ஜெயிலரின் ஹெச்.டி. பிரிண்ட் ! குஷியில் இணையதளவாசிகள்!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் மாபெரும் வெற்றியை பெற்றது. இதுவரை இதன் வசூல் மட்டும் ரூ. 525 கோடிக்கும் மேல் இருக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஆனால் , ஜெயிலர் திரைப்படம் இதுவரை ஒ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவில்லை. ஜெயிலர் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் தளங்களில் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,ஜெயிலர் படத்தின் ஹெச்.டி. ப்ரின்ட் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

வசூலில் சாதனை படைத்து வரும் ஜெயிலர் , வெளியான சில நாட்களிலேயே ஹெச்.டி. வடிவில் இணையத்தில் லீக் ஆகி இருப்பது படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top