Connect with us

ஜெயிலர் பட காட்சி நீக்கம்? ரஜினியின் மாநிலமே வைத்த செக்!

சினிமா

ஜெயிலர் பட காட்சி நீக்கம்? ரஜினியின் மாநிலமே வைத்த செக்!

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம், இதுவரை 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று RCB அணி சார்பில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதாவது, கதாபாத்திரம் ஒன்று, RCB அணியின் ஜெர்சியை அணிந்துக் கொண்டு, பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பேசும் வகையில், இந்த படத்தில் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும்.

இந்த காட்சி, தங்களது நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாக கூறி, அணி நிர்வாகத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை விசாரித்த நீதிபதிகள், செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

More in சினிமா

To Top