முதன்முறையாக சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி! எந்த இடத்தில் தெரியுமா?

தமிழர்களின் பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருவிழா, தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகை அன்று, ஜல்லிக்கட்டு, கபடிப்போட்டி, ரேக்ளா பந்தயம், மஞ்சு விரட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுகள் நடத்தப்படுவது வழக்கம்.

குறிப்பாக, சீறி வரும் காளைகளை, பாய்ந்து அடக்கும் இளைஞர்களை காண்பதற்கு, ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஆனால், இந்த வீர விளையாட்டுகள் பெரும்பாலும், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விளையாட்டை வட மாவட்டங்களில் நடத்த வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடந்த 10-ஆம் தேதி அன்று, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தூரம் உள்ள படப்பை என்ற பகுதியில், திமுக சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை, 10 ஆயிரம் பேர் பார்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இந்த விளையாட்டு நடத்தப்பட இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News