விஜயவாடாவில் இருந்து புறப்பட்ட ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சென்னை சென்ட்ரல் வந்தது. சென்னை சென்ட்ரலில் பயணிகளை இறக்கிவிட்டு பேசின் பிரிட்ஜ் பனிமனை நோக்கி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ரயிலின் முன்பக்க பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. இது தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் 2 மணி நேரம் போராடி சக்கரத்தை தண்டவாளத்தில் ஏற்றினர். இந்த சம்பவத்தால் பேசின் பிரிட்ஜ் மெயின் லைன் ரயில் போக்குவரத்தில் பாதிப்பும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.