எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை, கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில், விஜயுடன் சேர்ந்து, மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் என்று பல்வேறு தரப்பினர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு, இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அந்த போஸ்டர், பல்வேறு பொதுமக்களுடன் விஜய் செல்பி எடுத்துக் கொள்வது போல் உருவாக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு இருக்க, இப்படத்தின் 2-வது பார்வை போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர், விஜய் சாட்டையுடன் இருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.