விஜய் நடிப்பில் கடைசியாக தி கோட் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, தற்போது ஜன நாயகன் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்து வருகிறார்.
மேலும், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட்டோரும், இந்த திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கே.வி.என்.புரொடக்ஷன் தான், இந்த படத்தை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில், சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில், இன்று மாலை 6 மணிக்கு, ஜன நாயகன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இன்று முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதாவது, இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக இருப்பதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர், இந்த திரைப்படம், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
