விஜய்சேதுபதிக்காக ஒத்தை காலில் நிற்கும் பாலிவுட் நடிகை!

வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து, பெரும் பிரபலம் அடைந்தவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. கதை நன்றாக இருந்தால், வில்லனாக நடிப்பதற்கும் தயங்காத இவர், மற்ற மொழி திரைப்படங்களிலும், நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆசை என்று, பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய விருப்பம் குறித்து, விஜய்சேதுபதியிடமே செல்போனில் கூறிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.