Connect with us

Raj News Tamil

முதல் படத்திலேயே நயன்தாராவை மிஞ்சிய வாரிசு நடிகை!

சினிமா

முதல் படத்திலேயே நயன்தாராவை மிஞ்சிய வாரிசு நடிகை!

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், கொரட்டலா சிவா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தில், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

ஒரு சில பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்துள்ள ஜான்வி, இப்படத்தின் மூலம், தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார். ஆனால், முதல் படத்திலேயே, 5 கோடி ரூபாயை இவர் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

இந்த படத்திற்கு பிறகு, ராம்சரனின் இன்னொரு திரைப்படத்திலும் ஜான்வி தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

அந்த படத்திற்கு 10 கோடி ரூபாயை சம்பளமாக அவர் வாங்க உள்ளாராம். இது, தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top