ஜப்பானை சேர்ந்த டோகோ என்பவர் மிகப்பெரிய தொகையை செலவு செய்து ஒரு நாயாக மாறியுள்ளார். அந்த நபர் தனது மனித உருவத்தில் இருந்து நாயாக மாறுவதற்கு இரண்டு மில்லியன் யென் செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளார்.
தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை உருவாக்கும் ஜப்பானிய நிறுவனமான ஜெப்பெட் டோகோவை நாயாக மாற்றி உள்ளது. இவவாறு உருவாக்க 40 நாட்கள் ஆகியதாக கூறப்படுகிறது.
சிறு வயது முதலே நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் “நாயக பிறந்திருக்கலாம்” என தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளாராம். இந்நிலையில் நாயாகவே மாறி அதிர்ச்சியும் தந்துள்ளார்.
நாயாக மாறி உள்ள டோகோ, மற்றவர்கள் கொடுக்கும் போலி மரியாதையை விரும்பாததால், தனது மனித அடையாளத்தை மறைக்க விரும்பியதாகவும் தனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.