Connect with us

Raj News Tamil

தளபதி விஜய்க்கு சிறந்த நடிகர் விருது…எந்த படத்திற்கு தெரியுமா…!

சினிமா

தளபதி விஜய்க்கு சிறந்த நடிகர் விருது…எந்த படத்திற்கு தெரியுமா…!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குநர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் விருது மாநாடு படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், சிறந்த துணை நடிகர் விருது ஜெய் பீம் படத்துக்காக மணிகண்டனுக்கும், சிறந்த திரைக்கதை விருது மாநாடு படத்துக்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top