பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து, முன்னணி நடிகராக கார்த்தி உயர்ந்து வருகிறார். இந்த ஆண்டும், இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி, ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகும், ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், தங்கக் கடத்தலை மையமாக வைத்து, உருவாகி வருகிறது. இந்த படத்தின் கதை தொடர்பான தகவல், தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த 2019-ஆம் ஆண்டு, பிரபல நகைக்கடையில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கில், முருகன் என்பவர் மூளையாக செயல்பட்டிருந்தார். 4 மாநில காவல்துறையினருக்கும், தண்ணி காட்டிய இவர், தமிழக காவல்துறையினரால், இறுதியாக கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கிடையே, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு, சிகிச்சை பலன் இன்றி, உயிரிழந்தார். இந்த வழக்கை மையமாக வைத்து தான், ஜப்பான் திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
முருகனுக்கு எய்ட்ஸ் வந்ததை மட்டும் தவிர்த்துவிட்டு, மற்ற அனைத்து விஷயங்களையும், திரைக்கதையில் கொண்டு வந்து, இந்த படத்தை ராஜூ முருகன் எடுக்க இருந்தாராம்.
ஆனால், அந்த எய்ட்ஸ் வந்த விஷயமும் கதையில் இருக்கட்டும். எனக்காக உண்மை கதையில் நடந்த விஷயங்களை மாற்ற வேண்டாம் என்று கார்த்தி கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல், அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.