மல்லிகை பூ விலை 1200 ரூபாயாக உயர்வு!

தமிழகத்தில் தொடர்ந்து காய்கறிகளின் விலை உயர்ந்து வரும் நிலையில் பூக்களின் விலை குறிப்பாக மல்லியின் விலை அதி உச்சத்தை தொட்டது.

கோவில் திருவிழா காலங்களில், சுப முகூர்த்த மாதங்களில் பூக்களின் விற்பனை விலை சற்று அதிகமாகவே இருந்த நிலையில் மல்லிகைப்பூ போன்ற பூக்களின் வரத்து குறைவானதால் மல்லிகைப் பூவின் விலை பன்மடங்கு உயர்ந்து உயர்ந்துள்ளது.

அந்த வகையில் தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லிகைப்பூ 300 கிராம், ரூ. 400 ரூபாய் என்ற விலையிலும் மேலும் ஒரு கிலோ மல்லியின் விலை ரூபாய் 1200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் முல்லைப் பூவின் விலை கிலோ ரூபாய் 460 லிருந்து 560-க்கும் பட்ரோஸ் ரூபாய் 70-க்கும் ஜாதிமல்லி 450 ரூபாயிலிருந்து 500 வரைக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News