மல்லிகை பூக்கள் ரூ.2,500-க்கு விற்பனை!

திண்டுக்கல் மாவட்டம் பில்லம நாயக்கன்பட்டி, வெள்ளோடு, கல்லுப்பட்டி, நரசிங்கபுரம், சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

மேலும் இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் திண்டுக்கல் பூச்சந்தையில் விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது வரத்து குறைவின் காரணமாக மல்லிகை பூ கிலோ 2000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

இதற்கிடையே பில்லமநாயக்கன்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மல்லிகை பூக்கள் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக அரும்புகள் செடியிலேயே கருகியும், அழுகி காணப்படுவதால் பூக்கள் வரத்து குறைந்து விலை இருந்தும் விளைச்சல் இல்லாத நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட விவசாய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News