Connect with us

Raj News Tamil

பாலிவுட் பட்டியலில் முதலிடம் பிடித்த ஜவான்!அட்லீயின் அதிரடி அப்டேட்!

சினிமா

பாலிவுட் பட்டியலில் முதலிடம் பிடித்த ஜவான்!அட்லீயின் அதிரடி அப்டேட்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

ஜவான் படம் வெளியான முதல் நாளிலிருந்து விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் ஹிட் அடித்துவருகிறது.

இந்நிலையில்,ஜவானின் தற்போதைய வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.அதன்படி, ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாலிவுட்டின் ஒட்டு மொத்த படங்களின் வசூலை முறியடித்துள்ளது ,இதனை அட்லீ தனது எக்ஸ் தளத்தில் ஷோ் செய்து ,வசூல் டிரீட்டை ரசிகா்களுக்கு சமா்ப்பித்துள்ளாா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top