ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில், கடந்த 7ம் தேதி வெளியான திரைப்படம் ஜவான். பெரும் வெற்றியை பெற்றுள்ள இந்த திரைப்படம், வெளியான முதல் நாளே 129 கோடிக்கும் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், இதுவரை ஜவான் திரைப்படம் பெற்ற வசூல் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, படம் வெளிவந்து 11 நாட்களிலேயே 800 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது ஜவான் திரைப்படம்.
ஜெயிலரை தொடர்ந்து ரஜினியின் 2.0 திரைப்படத்தின் சாதனையையும் ஜவான் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.