ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த ஜவான்..!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 7ம் தேதி வெளியான திரைப்படம் ஜவான். இப்படம் வெளியான முதல் நாளே 129.6 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளிக்கிழமையான நேற்று, ‘ஜவான்’ படம் அதிகப்படியாக 109 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது வரை ஜவான் திரைப்படம் உலகளவில் 234 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதன் மூலம் அதிக வசூல் செய்த ஜெயிலர் படத்தை ஜெட் வேகத்தில் பீட் செய்து வருகிறது ஜவான்.

RELATED ARTICLES

Recent News