அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்த திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள், தங்களது விமர்சனங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
அதில், படம் நன்றாக தான் உள்ளது என்றும், சில இடங்கள் சொதப்பலாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது படம் நன்றாக உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால், கதை பழைய கதை தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஒட்டுமொத்தத்தில், இந்த திரைப்படமும், அட்லீக்கு பெரிய வெற்றி என்றே ரசிகர்களின் கருத்து இருந்து வருகிறது.