Connect with us

Raj News Tamil

பதானை மிஞ்சிய ஜவான் – முதல் நாள் வசூல்..?

சினிமா

பதானை மிஞ்சிய ஜவான் – முதல் நாள் வசூல்..?

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஜவான் படத்தின் வசூல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 160 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 60 லிருந்து 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஷாருக்கானின் முந்தய படமான பதான், வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 56 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்த நிலையில், அதனை ஜவான் படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top