இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி, காமெடி நடிகர் யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜவான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
படத்தின் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷாருக்கானின் முந்தய படமான பதான் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மிக பெரிய சாதனை படைத்து. அந்தவகையில் ஜவான் படமும் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.