2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக, அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறது.
இதற்கிடையே, பாஜகவுடன் அதிமுக இணைந்தால், கட்சியில் இருந்து ஜெயக்குமார் விலகுவதாக, தகவல் ஒன்று பரவி வந்தது. இவ்வாறு இருக்க, அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், கட்சியில் இருந்து விலகுவேன் என தான் கூறியதே கிடையாது என்றும், இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி என்றும் தெரிவித்தார்.
அதிமுக தனது உயிர் மூச்சு என்று கூறிய ஜெயக்குமார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில், தங்களது இயக்கம் பயணிக்கிறது. தானும் அதில் தான் தொடர்ந்து பயணிப்பேன் என்றும், அவர் கூறினார். இதன்மூலம், அதிமுகவில் இருந்து ஜெயக்குமார் விலகுகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.