ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் : மெரினாவில் தீவிர பாதுகாப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவடத்தில் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சினிமா, அரசியல் என சாதித்துக்காட்டிய ஜெயலலிதா உடல்நலக்கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 2016ம் ஆண்டு இதேநாளில் காலமானார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வி.கே. சசிகலா உட்பட பலர் ஜெயலலிதா நினைவடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.