முந்தைய காலங்களில், அறிமுகமாகும் படங்களின் பெயரையே, ஒருசில நடிகர்கள் தங்களது அடைமொழியாக வைத்திருந்தனர். ஆனால், அந்த டிரெண்ட் தற்போது இல்லாமல், மாறிவிட்டது. அதாவது, புதிதாக அறிமுகமாகும் நடிகர்கள், எந்தவொரு பட்டமும் இல்லாமலே உள்ளனர்.
ஏற்கனவே பட்டத்தை வைத்திருக்கும் சில முன்னணி நடிகர்களும், தங்களது பட்டத்தை துறக்க ஆரம்பித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவி, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இனிமேல் தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என்றும், ரவி மோகன் என அழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில், அறக்கட்டளையாக மாற்றுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, ரவி மோகன் ஸ்டியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.