Connect with us

Raj News Tamil

ரசிகர்களை குலை நடுங்க வைத்த ஜெயம் ரவி!

சினிமா

ரசிகர்களை குலை நடுங்க வைத்த ஜெயம் ரவி!

என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கி உள்ளவர் இயக்குநர் அஹமத். இவர் தற்போது, நடிகர் ஜெயம் ரவியை வைத்து, இறைவன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியானது. கொடூரமான சைக்கோ கில்லர், இளம்பெண்களை கடத்தி கொல்வது போன்ற காட்சிகள், டிரைலரில் இடம்பெற்றுள்ளது.

பரபரப்பான நொடிகளுடன் நகரும், இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள், ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

More in சினிமா

To Top