மணிரத்னம் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், கடைசியாக ஜெயம் ரவி நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு, தற்போது அகிலன் என்ற திரைப்படத்தில், அவர் நடித்து முடித்துள்ளார்.

வரும் 10-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர், நேற்று வெளியாகி, ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஆனால், இந்த டிரைலரின் இறுதியில், பெண்களை தரக்குறைவாக பேசும் கெட்ட வார்த்தை ஒன்று, இடம்பெற்றுள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.