வெளியான ஜெயம்ரவியின் மிரட்டலான தோற்றம் !

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’. இதில் கீர்த்தி சுரேஷ் யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார்.

ஜெயம்ரவியின் பிறந்தநாளையொட்டி இப்படத்தில் அவருடைய முதல் தோற்றத்தை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அவரின் 21 வருட திரை வாழ்க்கையில் இதுவரை நடிக்காத தோற்றத்தில் மிரட்டலான தோற்றத்தில் வெளிவந்த்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்று இசை வெளியீடு நடைபெற உள்ளது. ‘சைரன்’ படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது

RELATED ARTICLES

Recent News