தேரே இஷ்க் மெயின் என்ற இந்தி திரைப்படத்தில், நடிகர் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில், தனுஷ்-க்கு ஜோடியாக, நடிகை மமிதா பைஜூ நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
அதாவது, இப்படத்தில், தனுஷ்-க்கு வில்லனாக நடிகர் ஜெயராம் நடிக்க உள்ளாராம். மேலும், நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.